Tuesday, November 18, 2008

விவேகானந்தரின் சிந்தனைகள்

அஞ்சாது போராடுங்கள் மகத்தான பணிகளை செய்ய பிறந்திருக்கும் என் குழைந்தைகளே !
சிறிய நாய் குட்டிகளின் குறைப்பை கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியது இல்லை !
ஆகாயத்தில் முழங்கும் இடியோசை கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டியது இல்லை !
எதற்கும் துணிவு கொண்டவர்களை எழுந்துநின்று போராடுங்கள் !
மிருக பலத்தால் யாரும் வெற்றிபெற முடியாது !
ஆன்மீக பலம் ஒன்றால் மட்டுமே நாம் வீறு கொண்டு எழ முடியும் !
உண்மை நேர்மை , அன்பு போன்ற நற்பண்புகள் உங்களுக்கு துணை செய்வதை அமையட்டும் .
சுயநலமில்லாத மனிதன் மரணத்திற்கு கூட அஞ்ச வேண்டியது இல்லை .
ஆடம்பர வாழ்வில் ஈடு கொண்டவர்கள் ,
வாழ்வில் ஒருதுளி கூட கண்ணீர்
சிந்தாதவ்வர்கள் ஆசை வயப்பட்டு அதன் பின்
செல்பவர்கள்
சுயநலம் கொண்டவர்கள்
பிறர் துன்பம் கண்டு
மகிழ்பவர்கள் இவர்களெல்லாம் வாழ்வில் ஒருபோதும் இறை அனுபவத்தை பெற இயலாது

மனிதகுலம் பிழையில் இருந்து உண்மைக்கு செல்லவில்லை...மாறாக உண்மையில் இருந்துதான் உண்மைக்கு பிரயாணம் செய்கின்றது .அதாவது நாம் அனைவருமே தாழ்ந்த உண்மையில் இருந்து உயர்ந்த உண்மைக்கு செல்கிறோம் என்று கருதுங்கள்

No comments: