Tuesday, November 18, 2008

மெய்ஞானம் என்றால் என்ன?

  • அறியாமையால் பலர் பணம்தான் தெய்வம் நினைத்து பல தவறுகளை செய்துகொண்டு இருக்கிறார்கள் , அதனால் கிடைக்கபோகும் நன்மை தீமைகளை பற்றிய சிந்தனை இல்லாமல் எதையும் செய்ய துணிந்துவிடுகிறார்கள் , இவர்கள் உலகில் தாம் மட்டுமே அறிவுடையவர்கள் தமக்கு மட்டுமே சம்பாதிக்கும் சூத்திரம் தெரியும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் , இத்தகையவர்கள் கீழ்மக்களிலும் கீழோர் ஆவார். இவர்களை இறைவன் கவனிப்பதில்லை
  • வெளி பொருட்கள் மீதும் , பகட்டான வாழ்கை மீதும் பற்று வைக்காதீர்கள் , உலக வாழ்க்கையில் பற்றுள்ளவர்களுக்கு இறைவன் அருள் கிடைப்பதில்லை ,. ஞானம் உடையவர்களே இறைவனை விரைவில் காண்கிறார்கள் . ஞானம் என்பது யாராலும் அடையப்படாத நிலை இல்லை , சுத்தமான, எதற்கும் கலங்காத ,பிழைகள் செய்யாத அறிவே மெய்ஞானம் ஆகும் , அதை அடைய முயற்சி செய்யுங்கள் ,
  • மனிதர்கள் அவரவர் பாவத்திற்கு ஏற்ப மறுபிறவி எடுக்கிறார்கள் , பாவம் செய்யாத ஆத்மாகளே இறைவனுக்கு பிடித்தவையாக இருக்கிறது , பாவத்தில் இருந்து விடுபட்டவர்கள் மரணதி வெல்லும் சக்தி உடையவர்களாக திகழ்கிறார்கள்

No comments: