Tuesday, November 18, 2008

கோழைத்தனத்தை தாங்க முடியாது


இளைஞர்களின் லட்சிய புருஷர் ஆஞ்சநேயர்
அவர் அடக்கம் ,பிரம்மச்சர்யம் , வீரம் ஆகிய மூன்றின் உறைவிடமாவார்
ஆஞ்சநேயரை போன்று வலிமை படைத்தவர்களால் ஆன்மீகத்தில் சாதிக்க முடியும்.
உண்பதும் , உறங்குவதும் , செயல் படுவதும் , ஒன்றுக்காகவே
அது அனைத்திலும் இறைவனின் வடிவத்தை காப்பதற்காக என்று எண்ணி
செயல் படுகிறார்கள்
சாகின்ற நிலையிலும் கூட ஒருவர்க்கு... அவர் யார் எப்படிப்பட்டவர் என்ற கேள்வி கூட கேட்காமல் உதவி செய்வதுதான் கர்ம யோகம்
மனிதன் எந்த அளவுக்கு தன்னை உயர்த்திக்கொள்ள நினைக்கிறானோ
அந்த அளவுக்கு அவன் துன்பங்களையும் , கடுமையான சோதனைகளையும்
சந்திக்க வேண்டும்
குறைகளைகூட தாங்கிகொள்ளலாம் , ஆனால் கோழைத்தனத்தை தாங்கிக்கொள்ள முடியாது . அதனால் போர்வீரணி போல் நின்று போராடி உயிர் விடுவதே சிறந்தது
அறிவு, உள்ளம் இரண்டிலும் எது சொல்வதை பின்பற்றுவது என்ற போராட்டம் எழும்போது .... உள்ளம் சொல்வதையே பின்பற்றுங்கள் ... இதயத்தால் மட்டுமே மிக உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்ல முடியும்

No comments: